ராமநாதபுரத்தில் கூடுதல் சுகாதார வளாகம்

சிவகிரி,பிப்.13: வாசுதேவநல்லூர் யூனியன், ராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம், சரவணாபுரம், சண்முகநாதபுரம், கோடங்கிபட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் வசித்து வரும் 9 ஆயிரம் மக்கள் நலன்கருதி ஊராட்சி மன்ற பொது நிதியில் இருந்து புதிதாக பொது சுகாதார வளாகம் தண்ணீர் தொட்டியுடன் அமைக்கப்பட்டது. இதை சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ பார்வையிட்டார். அப்போது அவரிடம் கூடுதல் பொது சுகாதார வளாகம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு ராமநாதபுரம் பஞ். தலைவர் மகேந்திரா கோரிக்கை மனு அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார். அப்போது யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, ஊராட்சி செயலாளர் முருகராஜ் உடனிருந்தனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்