ராணுவ பகுதி பிரச்னைக்கு தீர்வு: தா.மோ.அன்பரசன் வாக்குறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக நகர செயலாளர் டி.பாபு, தென்சென்னை மேற்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், மதிமுக மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி ஆகியோர் உடன் சென்றனர்.  அப்போது தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘திமுகவிற்கு  வாக்களித்தால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள சமையல் காஸ் மானியம், இல்லத்தரசிகளுக்கு 1000, கொரோனா நிவாரண தொகை ₹4000, நின்றுபோன ஓய்வூதியங்கள்  போன்றவற்றை பெற்றுத் தருவேன். மேலும், இங்கு ராணுவ பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற முயற்சிக்கும், உயர் அதிகாரிகளிடம் பேசி, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்,’ என்றார். திமுக மாவட்ட பிரதிநிதிகள் சி.முத்து, ஜி.பி,ராமன், கே.சி.எஸ்,ராஜேந்திரன், செட்ரிக்ஜான், பட்ரோடு ராஜ், வட்ட செயலாளர்கள் செங்கை மோகன், மாறன், இசட் பாபு, தினகரன், மணிவண்ணன், சுனில் பால்ராஜ், ரவி, மகளிரணி சாந்தி, சத்யா,  ராஜலட்சுமி, வழக்கறிஞர்கள் தங்கதுரை, ராமானுஜம், பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதி காங்கிரஸ்  தலைவர் கோகுலகிருஷ்ணன், கன்டோன்மென்ட் சேகர், ஆன்ட்ரூஸ், ஜான்பாபு, சர்புதீன், ஜோஸ்வா ஆவின் ஆனந்த், கெஜபதி, மாஸ்டர்  மகி, மதிமுக பகுதி செயலாளர் கத்திபாரா சின்னவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரமேஷ், லெனின் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…