ராணிப்பேட்டையில் உரிய ஆவணமின்றி கோழி இறைச்சி வியாபாரியிடம் ₹7 லட்சம் பறிமுதல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் உரிய ஆவணமின்றி கோழி இறைச்சி வியாபாரி கொண்டு சென்ற ₹7 லட்சத்து ஆயிரத்து 320 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம்  முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, தேர்தல் பறக்கும்படையைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதல் கோட்ட அலுவலர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு ராணிப்பேட்டை தனியார் திரையரங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த கோழி இறைச்சி வியாபாரி ரபீக் அகமது என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி இருந்த ₹7 லட்சத்து ஆயிரத்து 720 பணம் இருப்பதை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி ரபீக் அகமது கொண்டு சென்ற ₹7 லட்சத்து 1,720 பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்