ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

சென்னை: குரோம்பேட்டையை சேர்ந்தவர் மவுலி. இவரது மனைவி சுனிதா(45). சுனிதாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த மாதம் 22ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று சுனிதாவிற்கு உணவு கொடுத்துவிட்டு மவுலி வீட்டு சென்றுவிட்டார். பின்னர், 23ம் தேதி காலை மனைவி சிகிச்சை பெறும் வார்டிற்கு சென்று பார்த்தபோது சுனிதா அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கடந்த 31ம் தேதி பூக்கடை காவல்நிலையத்தில் மவுலி புகார் அளித்தார். இந்தநிலையில், நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 8வது மாடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து, மவுலியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பூக்கடை போலீசார் காண்பித்தனர். அப்போது, இறந்தது தன்னுடைய மனைவி தான் என்று மவுலி கூறியுள்ளார். அவர் எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி