ராஜினாமா செய்யும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் முந்தைய பணிக்காலத்தை கணக்கில் எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ராஜினாமா செய்துவிட்ட பின்பு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் கிடைத்தால் அவரின் முந்தைய பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தியாகராஜன், மாலதி ஆகியோர் தாக்கல் செய்த மனுநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, அரசுப் பணியாளர்், பணியிலிருந்து விலகினால் அந்த  பணிக் காலத்தை விட்டுக்கொடுத்து விட்டதாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி பணியிலிருந்து தானே விலகினால் அந்த பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்காக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் பணியிலிருந்து சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து முறைப்படி பணி விடுவிப்பு பெறவில்லை. மாறாக ராஜினாமா செய்துவிட்டு புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். எனவே, அரசுப் பணியாளர் ஒருவர் பணியிலிருந்து தானே விலகினால் அந்த பணியின் முந்தைய பணிக்காலத்தை தற்போதைய பணிக்காலத்துடன் சேர்க்க முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….

Related posts

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு