ராஜாக்கமங்கலம் அருகே துணிகரம்; அம்மன் கோயில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

ஈத்தாமொழி: ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோயில் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமை கோவிலின் கருவறையில் பூஜை நடப்பது வழக்கம். மற்ற நாட்களில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலை சுற்றியுள்ள காம்பவுன்டு கதவு மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கோவில் கருவறை மற்றும் மரத்தினால் ஆன கிரில் சுற்றுச்சுவரின் கதவு பூட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் கடந்தம் மாதம் 14ம் தேதி கோவிலின் உள்ளே கருவறையில் பூஜை நடந்த பிறகு பூசாரி செல்லத்துரை கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இந்த கோவிலில் நேற்று சிசிடிவி கேமரா அமைக்கும் பணி நடந்தது. கோவில் நிர்வாகிகள் தர், பொன் துரை, இளங்கோ, ஜானகிராம், மணிகண்டராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது மரத்தினால் ஆன கிரில் தடுப்பு சேதமடைந்திருந்ததோடு கோவில் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போதுஅம்மன் சிலையில் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் காசு மாலை என  மொத்தம் 8 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் நகைகளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்….

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்