ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் பாதி அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே தமிழகத்திற்கு வழங்கியுள்ளது மத்திய அரசு

டெல்லி: ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் பாதி அளவிலான  தடுப்பூசிகளை மட்டுமே மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு வழங்கியது அம்பலமாகியுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்  படி 7.6 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டிற்கு மே  7-ம் தேதி வரை 72 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே அளவு அதாவது 7.8 கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு 1.4 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது தமிழ் நாட்டை போன்ற மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு தமிழ் நாட்டுக்கு வழங்கப்பட்டதை விட இருமடங்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதே போல் தமிழ் நாட்டைவிட குறைவாக 6.9 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 1.39 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. குஜராத்தை விட குறைவாக 6.6 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவுக்கு 1.06 கோடி தடுப்பூசிகளை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிக மோசமான செயல் என குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆக்சிஜன் முதல் மருந்துகள் வரை ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்ற்கு 72 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் சுமார் 66 லட்சம் தடுப்பூசிகள், அதாவது 91 விழுக்காடு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு