ராஜஸ்தானில் சுற்றுலா 2 ஆண்டுக்கு பின் மீண்டும் ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ ரயில்

ஜெயப்பூர்: ராஜஸ்தானில்  புகழ் பெற்ற, ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ சுற்றுலா ரயில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மீண்டும்  இயக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக, ராஜஸ்தான் சுற்றுலாத்  துறை சார்பில் ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ என்ற சிறப்பு சுற்றுலா ரயில், 1982ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் சேவையும் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா அச்சுறுத்தல் குறைந்து விட்டதால, இந்த சுற்றுலா ரயிலின் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த விழாவில், இம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். ராஜஸ்தானில் புகழ் பெற்ற சுற்றுலா நகரங்களான ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், சித்தோர்கார், பாரத்பூர் ஆகியவற்றுடன், டெல்லி, ஆக்ராவுக்கும் கூட இந்த ரயில் 7 நாட்கள் இயக்கப்படுகிறது. இதில், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கிறது….

Related posts

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்