ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணி மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தகவல்

 

ராஜபாளையம், ஆக.7: ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தும் பணி மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணியை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், விருதுநகர் செயற்பொறியாளர் செல்வராஜன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்,

இந்நிகழ்ச்சியில் பேசிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, கட்டிடப்பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. 26.04.2023 அன்று கட்டிடப்பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 24.06.2023 அன்று பில்லர் அமைக்க நிலம் தோண்டப்படுவதையும் கம்பியின் தரத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கட்டிடப்பணியை தொடர்ந்து விரைவுபடுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக இச்சிறப்பு வாய்ந்த மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணி, தமிழ்நாடு முதலமைச்சர் நமது ராஜபாளையம் தொகுதி பொதுமக்களுக்கு வழங்கிய வரபிரசாதம் என்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், தலைமை மருத்துவர் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியன், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்