ராஜபாளையத்தில் 120 கிலோ குட்கா பறிமுதல்

ராஜபாளையம், ஜூன் 22: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அழகைநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 டூவீலரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் வந்தனர்.

அவர்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அழகைநகரைச் சேர்ந்த வெங்கடேஷ், முகில்வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த கணேசன், பிடிஆர் நகரை சேர்ந்த நவநீதன், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் என்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து குட்கா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 120 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை