ராஜபாளையத்தில் புறவழிச்சாலை இல்லாததால் போக்குவரத்து நெரிசல்-ஆமை வேகத்தில் நகரும் வாகனங்கள்

ராஜபாளையம்:  ராஜபாளையம் நகரில் புறவழிச்சாலை இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்கின்றன. ராஜபாளையத்தில் பிரதான சாலையாக மதுரை-தென்காசி சாலை உள்ளது. இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நகரில் புறவழிச்சாலைகள் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கிய நேரங்களில் மருத்துவமனை ஆம்புலஸ்கள் செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால், நகரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த திமுக ஆட்சியில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. நகரில் புறவழிச்சாலைகள், இணைப்புச்சாலைகள் அறிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி