ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

ராஜபாளையம், ஜூலை 16: ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராசரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் கிருஷ்ணமராச பாளையம் நாடார் உறவின்முறைத் தலைவர் வடமலையான் விழாவிற்கு தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து தலைமையுரை ஆற்றினார். நாடார் துவக்கப்பள்ளி மற்றும் நாடார் மேல்நிலைப் பள்ளிச் செயலாளர். அழகர் ராஜன் ராஜபாளையம் கிருஷ்ணம ராசபாளையம் நாடார் உறவின்முறைச் செயலாளர் கென்னடி இணைந்து பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராசரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு விழா மேடையில் உறவின்முறைப் பெரியோர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்.

பின்னர் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக நாடார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து காமராசர் புகழைப் போற்றிப் பாடும் வகையில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை நிர்வாகித்தினர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி காந்தி சிலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள காமராசர் சிலையை அடைந்தது. உறவின்முறை நிர்வாகிகள் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.தொடர்ச்சியாக ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் சாலை மூலம் பள்ளியை வந்தடைந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை