ராசிபுரத்தில் 1371 மூட்டை பருத்தி ₹47 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம் : ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அக்கரைப்பட்டியில் நடந்த பருத்தி ஏலத்தில் 1371 மூட்டை பருத்தி ₹47 லட்சத்திற்கு ஏலம் போனது. ராசிபுரம் வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கத்தின் கிளையான வெண்ணந்தூர் அடுத்த அக்கரைப்பட்டியில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அக்கரைப்பட்டி,  பாலமேடு, மாமுண்டி, பொரசல்பட்டி, ஓ.சவுதாபுரம், காகாபாளையம், வையப்பமலை,  ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சுரபி ரக பருத்தி 1371 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க அவிநாசி, அன்னூர், திருப்பூர்,  கோவை, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுரபி ரக பருத்தி அதிகபட்சமாக 12350க்கும், குறைந்தபட்சமாக 9899க்கும் ஏலம் போனது. இதில், மொத்தம் 1371 மூட்டை பருத்தி, ₹47லட்சத்திற்கு ஏலம் போனது. …

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு