ராசிபுரத்தில் கன மழை சூறைக்காற்றுக்கு வணிக வளாக கடைகளின் மேற்கூரை சேதம்

ராசிபுரம் : ராசிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்த போது, புதிய பஸ் நிலையம் நகராட்சி வணிக வளாக கடைகளில் தகர மேற்கூரைகள்  பெயர்ந்து சேதமடைந்தது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 100 நூற்றுக்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் உள்ளது. இந்த கடைகள் பழுதடைந்ததால் புதியதாக கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் போதிய நிதிவசதி இல்லாததாலும், நகராட்சியில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை இல்லாததாலும் பழுதடைந்த கடைகளை பராமரிப்பு செய்து, கடையின் மேற்கூரையில் காங்கிரீட் தளங்கள் இடிக்கப்பட்டு, தற்காலிக தகர மேற்கூரை அமைத்து தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 40 கடைகளுக்கு மேல் தகரத்தாலான மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது காற்று வீசியதில் நகராட்சி வணிக வளாக கடைகளின் தகர மேற்கூரைகள் பெயர்ந்து காற்றுக்கு பறந்தது. சில மேற்கூரைகள் சேதமடைந்தது. மழையினால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் வணிக வளாக கடைகளில் ஆய்வு நடத்தி, தரமற்ற முறையில் மேற்கூரை அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!