ராக்கிங் விழிப்புணர்வு முகாம்

 

தொண்டி, ஜூலை 17: தொண்டி அழகப்பா பல்கலை சுழகம் கடலியல் மற்றும் கடலோரவியல் மாணவ,மாணவிகளுக்கு ராக்கிங் குறித்தும் ராக்கிங் செய்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருவாடானை மாவட்ட உரிமையில் நீதிபதி மனீஸ் குமார் பேசுகையில், ராக்கிங் என்பது உடல் ரீதியாக துன்புறுத்துவது மட்டும் கிடையாது மன ரீதியாகவும் துன்புறுத்துவதும் ராக்கிங் தான்.

உதாரணமாக மாணவர் ஒருவர் தன்னுடைய பாடத்தை மாணவி ஒருவரை எழுத சொல்லுவதும் ராங்ரிங் தான். மாணவ,மாணவியர் தொடக்க நிலையிலேயே ராக்கிங்கை தடுக்க முன்வரவேண்டும். சட்டம் அனைத்து வரையிலும் துணை நிற்கும் என்று பேசினார். கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் சட்டம் குறித்து பேசினர். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நீதிபதியிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை