ராகுல் குறித்து சர்ச்சை பேச்சு அசாம் முதல்வரை பதவி நீக்குங்கள்: தெலங்கானா முதல்வர் ஆவேசம்

ஐதராபாத்: ராகுல் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த அசாம் முதல்வரை, பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா சமீபத்தில் பிரசாரம் செய்தபோது, சர்ஜிக்கல் ஸ்டிரைக், கொரோனா தடுப்பூசியின் திறன் குறித்து ராகுல் காந்தி சந்தேகம் கிளப்புவது, அதற்கு ஆதாரங்கள் கேட்பது பற்றி ஆவேசமாக பேசினார். ராகுலின் பிறப்பு பற்றி ஆதாரங்கள் கேட்டு சவால் விட்டார். அவருடைய இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத் அடுத்த ராயகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ‘பிரமதர் மோடி, பாஜ தலைவர் நட்டாவிடம் கேட்கிறேன். இதுதான் நமது இந்திய கலாசாரமா? வேதங்களிலும், மகாபாரதத்திலும், ராமாயணத்திலும், பகவத் கீதையிலும் கற்பிக்கப்படுவது இதுதானா? இது பாஜ.வின் கலாசாரமா? இந்து தர்மமா? அவருடைய பேச்சுக்காக வெட்கப்படுகிறேன். இது நாட்டுக்கு நல்லதல்ல. நாங்கள் கைக்கட்டி அமைதியாக இருப்போம் என்று நினைக்கிறீர்களா? அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்,’ என்று ஆவேசமாக தெரிவித்தார்….

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்