ராகுல் காந்தி யாத்திரையில் பிரியங்கா மகள் பங்கேற்பு

கோட்டா: காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகள் மிராயா  பங்கேற்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பரில்  கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.  கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து, கடந்த 5ம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானின் பண்டி மாவட்டம் பபை நகரில் நேற்று காலை யாத்திரை தொடங்கியது. இந்நிலையில் நேற்று பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகள் மிராயா வதேரா ஆகியோர் யாத்திரையில் கலந்து கொண்டனர். இந்த நாள் மகளிருக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்தும் தினமாக கடைப்பிடிக்கப்படும்  என  காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதையொட்டி 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர் என்று ஒற்றுமை யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்….

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை சூழ்ந்த பெருவெள்ளம்: 30 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர்

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு