ராகுல்காந்தி மன்னிப்புக்கேட்க ஒன்றிய அரசு தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டுவந்ததை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2 வது அமர்வு சற்று முன்னதாக தொடங்கியது. அவை தொடங்கியதும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராகுல் காந்திக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் போது பேசிய ராஜ்நாத்சிங் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் ராஜ்நாத்சிங் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது….

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு