ராகுல்காந்தி பற்றி அவதூறு பரப்பிய பா.ஜ.வை கண்டித்து வடக்கு மாவட்ட காங். ஆர்ப்பாட்டம்

 

கோவை, அக். 7: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜவை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், கருமத்தம்பட்டியில் பாஜ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று மாலை நடைபெற இருந்தது. ஆனால், போலீசார் முன்னதாகவே தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார்.

மாநில துணை தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அழகுஜெயபால், மாநில செயலாளர் விஜயகுமார், நகர தலைவர் பி.பாலசுப்பிரமணியம், பழையூர் செல்வராஜ், ஆர்.பி.முருகேசன், மருதமலை முருகன் கோவில் அறங்காவலர் சொக்கம்புதூர் கனகராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான நவீன்குமார், மாநில ஓ.பி.சி. பிரிவு துணை தலைவர்கள் பருவாய் சக்திவேல், பழனிசாமி, தீரன் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பா.ஜ.வை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சவுந்தர்குமார், காலனி ஜனார்த்தனன், நாகராஜ், செந்தாமரைக்கண்ணன், ராமலிங்கம், ஜெயக்குமார், சக்திசதீஷ், சம்பத்குமார், நசீர் உசேன், பாலு யாதவ், ரங்கராஜ், பெருமாள்சாமி, காமராஜ், காளிமுத்து, சவுந்தர்ராஜ், பாலசுப்பிரமணியம், துரைசாமி, ராஜேந்திரன், நாகராஜன், சூலூர் கண்ணன், அசோக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஆகாஷ், பேரூர் மயில், அருள் அந்தோணி, விளம்பரம் ராமசாமி, அர்ஜுன், சின்னமணி,

சின்னசாமி, சண்முகம், சிவசாமி, நடராஜன், வெங்கடாசலம், ராஜ்குமார், காயத்ரி, ரோட்டரி ஆறுமுகம், வடுகபாளையம் பாலு, தங்கவேல், சந்திரசேகர், இளைஞர் காங்கிரஸ் அருண்குமார், அசோக், பாலாஜி, புருஷோத்தமன், முரளி கிருஷ்ணன், சச்சிதானந்தம், ராஜேஷ், சரவணகுமார், கோகுல், சரண், குமரப்பன், ரமணி, காமராஜ்துல்லா, மேஸ்திரி செல்வம், மகளிர் காங்கிரஸ் செல்வி, பிலோமினா, ரெஜினா, மேதினா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை