ரஷ்ய விமானம் 28 பேருடன் மாயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் பெட்ரோபாவ்லாக்ஸ் – கம்சாட்ஸ்கியில் இருந்து பலானா நகருக்கு, ‘ஆன்டோனாவ் ஆன் 26’ என்ற விமானம் நேற்று புறப்பட்டு  சென்றது. இதில், 22 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் பாலானா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது, விமான நிலையத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும்போது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து அது துண்டிக்கப்பட்டது. மேலும், ரேடாரில் இருந்தும் விமானம் மாயமாகி உள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமானம் வந்த வழிதடத்தில் 2 ஹெலிகாப்டர்களும், விமானமும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடலில் பல்வேறு கப்பல்கள் மூலமும் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே விமான நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் கடலில் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. …

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்