ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக்டாக் செயலி நிறுவனம் அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக்டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல நகரங்களில் குண்டுவீசி நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது. குறிப்பாக, கார்கிவ், மரியுபோல், சுமி போன்ற நகரங்களில் உச்சகட்ட தாக்குதல் நடந்து வருகிறது. 12ம் நாளாக இன்றும் தாக்குதல் தொடர்வதால் பல நகரங்களில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய அரசு போலி செய்திகளை வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள டிக்டாக் செயலி நிறுவனம்; பெரும் சோகத்தையும், தனிமையையும் எதிர்கொள்ளும் போரின் போது சிறு ஆறுதலாக தங்களது சேவை இருந்ததாகவும், ஆனால் ரஷ்யா அரசின் புதிய சட்டம் மூலம் அதனை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், தெரிவித்துள்ளது. எனவே ரஷ்யாவில் நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாகவும், அதே நேரத்தில் தகவல் பரிமாற்ற சேவை தொடரும் என்றும் டிக்டாக் நிறுவனம் கூறியுள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்துவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. …

Related posts

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை