ரவை அடை

செய்முறை:(கோதுமை மாவு 200 கிராம், ரவை 200 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.) ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மேலே சொன்ன அளவுகளில் எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் எல்லா பொருட்களையும் கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு தண்ணீரைத் தெளித்து நன்றாக, மாவை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அடை தோசை ஊற்ற போவது கிடையாது. மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து ஒவ்வொரு, சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு வாழை இலையின் மேல் எண்ணெயை தடவி, அதன் மேல் ஒரு அடை உருண்டையை வைத்து, விரல்களால் சம அளவுகளில் தட்டி இந்த அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பக்குவமாக சிவக்க வைத்து எடுக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றால், பால் கவர் அல்லது வேறு ஏதாவது கொஞ்சம் திக்கான கவரின் மேல் எண்ணெயை தடவி இந்த அடையை விரல்களால் சம அளவில் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும். அடையை மொத்தமாக தட்டி விட்டால், தட்டிய அடை மேலே சிவக்கும். உள்ளே சீக்கிரத்தில் வேகாது. தோசைக்கல்லில் போட்டு அடையை மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்துக் கொண்டால் ரவை அடை தயாராகி இருக்கும். இந்த ரவை அடை சாப்பிடுவதற்கு மிக மிக சுவையாக இருக்கும்….

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி