ரவுடி ஆனந்தனை கொன்ற 4 பேர் குண்டாசில் கைது

 

சேலம், மே 8: சேலம் காரிப்பட்டியில் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனை வெட்டிக் கொன்ற 4 பேரை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் கைது செய்து சிறை வைத்துள்ளனர். சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன் (44) பிரபல ரவுடி. கொலை, வழிப்பறி, அடிதடி என 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இவரை கடந்த 2 மாதத்திற்கு முன் மற்றொரு ரவுடிக்கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கில் ரவுடி ஆனந்தனின் உறவினரான குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த அன்பழகன், அவரது கூட்டாளிகளான சின்னனூரை சேர்ந்த சக்திவேல், வேலம்பட்டியை சேர்ந்த அஜித்குமார், கன்னங்குறிச்சி தாமரைநகரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி ஆனந்தனை கொலை செய்த ரவுடி அன்பழகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஏற்கனவே அடிதடி, கொலைமுயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி அன்பழகன் (40), சக்திவேல் (35), அஜித்குமார் (26), மணிகண்டன் (36) ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், மாவட்ட எஸ்பி சிவக்குமார் மூலம் கலெக்டர் கார்மேகத்திற்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்று ரவுடிகள் அன்பழகன், சக்திவேல், அஜித்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை கோவை மத்திய சிறையில் உள்ள 4 பேரிடமும் போலீசார் கொடுத்தனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்