ரயில் நிலையங்களில் சோதனை 17 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை:  சென்னை ரயில்வே காவல் மாவட்ட போலீசார்  நேற்று காலை ஈரோடு ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது, சண்டிகரில் இருந்து மதுரைக்கு  எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 2  வாலிபர்களிடம் விசாரித்தனர். மேலும், அவர்களது பையை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில், தருமபுரி சரவணகுமார்(25), சரத்குமார்(25) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து 17 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், நேற்று மைசூரில் இருந்து  திருப்பதிக்கு சென்ற ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 5வது  நடைமேடையில் நின்றது. அப்போது அந்த ரயிலின் டி-2 பெட்டின் முன்பு  கேட்பாரற்று கிடந்து பையில் 21 லிட்டர் மதுபான பாட்டில்களையும், 32 லிட்டர் மதுபான  பாக்கெட்டுகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்