ரயில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் கைது

திருப்பூர், டிச.23: திருப்பூர் வழியாக ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் அடிப்படையில் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ரயிலில் இறங்கி வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் கேரளாவை சேர்ந்த அஜீத்மோகன் (27) என்பதும், அவர் பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றதும், போலீசார் சோதனை செய்வது தெரிந்ததும் திருப்பூரில் இறங்கி பஸ் பயணம் செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அஜீத்மோகனை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி