ரயில்வே பாலத்தின் அடியில் தேங்கும் மழைநீர்

அரூர், ஜூலை23: மொரப்பூர், தாசிரஅள்ளி வழியாக சிந்தல்பாடி செல்லும் பாதையில் ரயில்வே பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி உள்ளதால் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிந்தல்பாடி, ராமியம்பட்டி, தென்கரைகோட்டை, தொங்கனூர், வகுத்தப்பட்டி, கடத்தூர், அரூர் உள்பட பல ஊர்களுக்கு பாலத்தின் அடியில் உள்ள பாதையை பஸ்கள், டூவீலர், மினிடோர் வாகனங்கள், நடந்து செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறிதளவு மழை பெய்தாலும், ஆவலம்பட்டியில் ரயில்வே பாலத்தின் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாக செல்லும் பெண்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாலத்தின் அடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி