ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆணை வழங்கிய 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு போலி பணிநியமன ஆணை வழங்கிய 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, அண்ணனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 12 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணிநியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலாராணி விசாரணை நடத்தினார். அதில் ரயில்வே  துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் பணத்தை  பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணை வழங்கியதாக அம்பத்தூர், சோழம் பேடு ரோடு, பல்லவா பிளாட்ஸை சேர்ந்த பெளலின்மேரி (எ) ஜெயசீலி (47), கொளத்தூர், 3வது தெருவை சேர்ந்த டில்லிபாபு (47), தண்டையார்பேட்டை, காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரிதிவிராஜ் (36), மதுரை, நரிமேடு, மருது பாண்டியன் நகரை சேர்ந்த சுந்தரம் (38), கேரளா, ஆலபி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜா (46) மற்றும் சுரேந்திரன் (59), திண்டுக்கல் மாவட்டம், பழனி, சிவன் கோயில் அருகில், சித்தா நகர் பகுதியை சேர்ந்த கனவாபீர் (39) ஆகிய 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். * கமிஷனர் எச்சரிக்கைஅரசு வேலை வாங்கி தருவதாக, பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என்று கூறி அவர்களுடன் எடுத்த போட்டோக்களைக் காட்டி, நம்பிக்கையூட்டி ஏமாற்றும் புரோக்கர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது