ரயிலில் கஞ்சா கடத்திய உ.பி.,வாலிபர் கைது

சேலம், மார்ச் 7: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று, சேலம் ரயில்வே போலீசார், டெல்லி-திருவனந்தபுரம் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர், ரயில் நிலையத்தில் இறங்கி சென்றார். அவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டார். அதில், அவர் பையில் கஞ்சா கடத்தி வந்ததும், உத்தரபிரதேசம் மாநிலம் மதராவில் இருந்து ஒரு கிலோ ₹10 ஆயிரத்திற்கு கஞ்சாவை வாங்கி வந்ததும், பஞ்சுமிட்டாய் விற்பது போல், சிறு, சிறு பொட்டலமாக நாமக்கல்லில் கஞ்சாவை விற்க சென்றதும்தெரிந்தது. இவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிவார் மாவட்டத்தை சேர்ந்த சத்தேந்திரசிங்(27) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவரையும், கஞ்சாவையும் சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்