ரயிலில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திருக்கச்சூர் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் பட்டு என்ற நிரோஷா (20). இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்தார். நேற்று காலை கல்லூரி செல்ல சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கு இவர் வந்துள்ளார். பின்னர், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறி கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில்,  சிங்கபெருமாள் கோயில்-மறைமலைநகர் இடையே ரயில் வந்தபோது, திடீரென ரயிலில் இருந்து நிரோஷா குதித்துள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நிரோஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக,  போலீசார் வழக்குப்பதிவு செய்து  குடும்ப பிரச்னையால் இவர்  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, கல்லூரியில் யாராவது பாலியல் தொல்லை   கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நர்சிங் மாணவி ரயிலில் இருந்து குதித்து   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து