ரப்பர் விலை திடீர் உயர்வு : கிலோ ₹177.50 ஆனது

நாகர்கோவில் : ரப்பர் விலை திடீரென்று உயர்ந்துள்ளது ரப்பர் விவசாயிகளை மகிழ்ச்சியடையசெய்துள்ளது. ரப்பர் விலை இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் கணிசமாக உயரத்தொடங்கியுள்ளது. கோட்டயம் ரப்பர் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரப்பர் (ஆர்.எஸ்.எஸ் 4) ₹177.50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இது கிலோ ₹176.50 ஆக இருந்தது. ரப்பர் லாட்டக்ஸ் விலை நேற்று கிலோ ₹130.50 ஆகும். ரப்பர் மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு ஒரு கிலோ ரப்பர் விலை ₹200ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரப்பர் மற்றும் லாட்டக்சுக்கு  மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்த நிலையில் லாட்டக்ஸ் கொண்டு தயார் செய்யப்படுகின்ற ரப்பர் கை உறைகள் போன்றவற்றுக்கு சந்தையில் மவுசு மற்றும் தேவை அதிகரித்தது. அதனால் லாட்டக்ஸ் விலை உயர்ந்துள்ளது. ஷீட் உற்பத்தியை விட லாட்டக்ஸ்  உற்பத்தி எளிதானது ஆகும். இதனால் ரப்பர் உற்பத்தியாளர்கள் ரப்பர் ஷீட் தயார் செய்வதை குறைத்து லாட்டக்ஸ் தயார் செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இதனால் ரப்பர் ஷீட் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. மேலும் கண்டெய்னர்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்ட காரணங்களினால் ரப்பர் இறக்குமதியும் குறைந்தது.  கப்பல் நிறுவனங்கள் இறக்குமதிக்கான செலவை அதிகரித்ததும் ரப்பர் இறக்குமதி குறைய காரணமாக கூறப்படுகிறது. இதனால் டயர் கம்பெனிகள் உள்நாட்டு சந்தையில் ரப்பர் கொள்முதல் செய்ய ெதாடங்கினர். இதன் காரணமாக ரப்பர் விலை தற்போது உயரத்தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரப்பர் விலை உயரத்தொடங்கியுள்ளது ரப்பர் விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது….

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்