ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி, நவ.9: சூளகிரி அருகே, பண்ணப்பள்ளி கிராமத்தில் ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சூளகிரி ஒன்றியம், பண்ணப்பள்ளி கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் முன்னேற்ற குழுவிற்கு, ரபி பருவம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜான்லூர்து சேவியர் தலைமை வகித்து பேசுகையில், ‘விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை பயிரிட்டு, மானியங்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்குண்டான விதைகள் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்,’ என்றார்.

உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன், ‘நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பண்ணை கருவிகள், தார்பாலின், பேட்டரி, தெளிப்பான், ஜிப்சம், ஜிங்க் சல்பேட் மற்றும் தானியங்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படும்,’ என்றார். இதில், ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுநாத் கவுடா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முகமதுரபி, பழனிசாமி, உதவி தோட்டக்கலை அலுவலர் திருவேங்கடம், உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை