ரஜினியின் பிறந்த நாளில் ஜெயிலர் படத்தின் வீடியோ வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மீண்டும் இணைந்துள்ளது. இதனால் இப்படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேபோல் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார். ரஜினியும் நெல்சனும் இணையும் முதல் படமிது. இந்த காரணங்களால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ரஜினியுடன் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பதும் படத்துக்கான ஆவலை ரசிகர்களிடையே அதிகம் தூண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாள். இதையொட்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள், கோயில்களில் சிறப்பு பூஜைகள், ஏழைகளுக்கு அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார். ரஜினியின் பிறந்த தினத்தையொட்டி ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் இருக்கும் என சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை ஜெயிலர் படத்தில் ரஜினி தோன்றும் ஸ்பெஷல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. முத்துவேல் பாண்டியன் அர்ரைவ்ஸ் என இந்த வீடியோவுக்கு பெயரிடப்பட்டது. இதில் ஸ்டைலாக நடந்து வரும் ரஜினி, பெரிய கத்தியை எடுத்து திரும்பி பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்