ரசாயன கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க மக்கள் மனு

 

ஈரோடு, ஜூலை 2: சாக்கடையில் ரசாயன கழிவு நீர் வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நேற்று ஈரோடு, வைராபாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் வசித்து வரும் வைராபாளையத்தில் உள்ள சினிமா தியேட்டர் அருகில், டையிங் ஆலையிலிருந்து இரவு நேரங்களில் விஷத்தன்மை கொண்ட ரசாயன கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்து விடுகிறார்கள். இந்த, கழிவுநீர் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு ஆகியவற்றில் கலந்து தண்ணீரை மாசுபடுத்தி வருகிறது. எனவே, டையிங் பட்டறையில் இருந்து ரசாயன கழிவுநீர் திறந்து விடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு