யோகா நிலையில் உடலில் விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்ற பள்ளி மாணவர்கள்

கூடலூர், ஜன. 1: தமிழகத்தில் 2023ம் ஆண்டின் இறுதி நாட்கள், பெரும் சவாலாகவே இருந்தது. டிசம்பர் மாதத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டி போட்டது மிக்ஜாம் புயல். இதையடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி, தெனிகாசி பகுதிகளில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழை பலத்த சேதம் ஏற்படுத்தியது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் இம்மாவட்டங்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், இன்று தொடங்கும் ஆங்கிலப் புத்தாண்டில் விவசாயம் செழித்து நாடு முன்னேறவும், இயற்கை பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்கவும், புத்தாண்டு எல்லா மக்களுக்கும் மிக சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலோடு கூடலூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையில், நேற்று சமகோணாசனம் செய்து தங்கள் உடல் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டனர். யோகாசனத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த தேனி மாவட்ட யோகாசன பயிற்சியாளர் ரவி ராம் மற்றும் யோகா நிபுணர் ராஜேந்திரன் பள்ளி முதல்வர் பால கார்த்திகா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்