மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகன நம்பர் பிளேட் விற்றால் நடவடிக்கை பாயும்: கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை: மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகன நம்பர் பிளேட் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் வாகன சட்டம் 50 மற்றும் 51ன் படி வாகனங்களுக்கான பதிவு எண் தகடுகளின்,  அளவையும், வாகன பதிவு எண்களையும் பரிந்துரை செய்கிறது. ஆனால் வாகனம் ஓட்டிகள் பலர் தங்களது வாகன எண் பலகைகளில் தலைவர்கள் படங்கள், கவிதைகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்ைனயில்25ம் தேதி வாகன நிறுத்தும் இடங்களில் நடந்த சிறப்பு தணிக்கையில் சரியாக பதிவு எண்கள் இல்லாத 4,132 வாகனங்கள் அடையானம் காணப்பட்டு வழக்கு பதிவு செங்யயப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் பழுதடைந்த எண் தகடுகளை விற்கும் கடைகளை எச்சரித்து, அந்த நம்பர் பிளேட்டுகளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கையாக போக்குவரத்து ஆய்வாளர்கள் தங்களது காவல் எல்லையில் உள்ள ஆட்டோமொபைல் கடைகளுக்கு சென்று அனைத்து குறைபாடுள்ள நம்பர் பிளேட்டுகளை விற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில்  சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 138 கடைகளில் பழுதடைந்த நம்பர் பிளேட்டுகள் சம்மந்தமாக போக்குவரத்து போலீசாரால் எச்சரிக்கப்பட்டன. அதேபோல், ஜிபி ரோடு, புதுப்பேட்டை போன்ற இடங்களில் நம்பர் பிளேட்டுகள் உட்பட ஆட்டோமொமைல் உதிரிபாகங்கள் விற்கும் முக்கிய இடங்களில் போக்குவரத்து உதவி கமிஷனர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் வியாபாரிகள் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டனர். …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்