மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை

 

திண்டிவனம், மே 31: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் கந்து வட்டி கொடுமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கந்து வட்டி கொடுமையால் உயிர் பலிகள் ஏற்படுகிறது. இதற்கு காவல் துறை உடந்தையாக இருக்கிறது. எனவே கந்து வட்டி தண்டனை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் விசாரணை நடத்தி 50 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த ஊழல் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் குடிசைப் பகுதி அதிகமாக இருப்பதால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. இதற்கும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்றார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவராக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த அம்மையாரை அவர் அப்படி பார்க்கிறார். அவர் பார்வை அப்படி இருக்கிறது. இதில் என்ன தப்பு இருக்கிறது, என்றார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு