மோடி ஜீ… விவாதம் நடத்துங்கள்…வீடியோ மூலம் எதிர்க்கட்சிகள் அறிவுரை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில், விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் 3 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்து அவையில் பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இந்த கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரைன் நேற்று டிவிட்டரில் 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நாடாளுமன்றத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி எம்பிக்கள் என பல்வேறு உறுப்பினர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என பேசிய காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, ‘பிரதமர் மோடி ஜீ… நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளுங்கள். எதிர்க்கட்சி  தலைவர்களின் கோரிக்கையை கேளுங்கள். கடந்த 14 நாட்களாக நாங்கள் வலியுறுத்திய போதும் நீங்கள் விவாதத்து்ககு அனுமதிக்கவில்லை. விவாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம் என நீங்கள் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் இப்போதே விவாதத்தை தொடங்குங்கள்,’ என நாடாளுமன்றத்தில் பேசியது, வீடியோவில் இடம் பெற்றுள்ளது.இதேபோல், ‘நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் தேவை, அரசியலமைப்பின்படி எங்களுக்கு பேச்சு சுதந்திரம் இருக்கிறது,’ என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர்ராய் வலியுறுத்தி உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் வந்தனா சவான், ‘இந்த அரசு பெகாசஸ் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தும், மக்களின் பேச்சை கேட்காமலும் தேவையில்லாமல் மக்களை ஏமாற்றுகிறது. இது அவமானகரமானது,‘ என்று கூறியிருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, ‘பெகாசஸ் ஒவ்வொருவருடைய வீட்டையும் அடைந்து விட்டது. அது குறித்து விவாதிக்க  வேண்டும்,’ என்கிறார். ஆம்ஆ த்மி உறுப்பினர் சுசில் குமார் குப்தா, ‘டெல்லி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசு அது குறித்து பேசவே இல்லை,’ என குறிப்பிட்டுள்ளார்….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு