மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

 

மொடக்குறிச்சி,ஜூன்15: மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 15,123 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.15க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.69க்கும், சராசரி விலையாக ரூ.19.99க்கும் ஏலம் போனது. மொத்தம் 6,871 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனையானது.

அதேபோல் தேங்காய் பருப்பு 108 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.39க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.60க்கும், சராசரி விலையாக ரூ.73.29க்கும், இரண்டாம் தரம் அதிகபட்ச விலையாக ரூ.61.05க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.55.60க்கும், சராசரி விலையாக ரூ.57.60க்கு ஏலம் போனது. மொத்தமாக 2,768 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. மொத்தமாக தேங்காய், தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை