மொகரம் பண்டிகையை முன்னிட்டு கல்வராயன்மலை ெபரியார் நீர்வீழ்ச்சி, படகு குழாமுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேகம், பெரியார், பண்ணியப்பாடி, கவ்வியம், செருக்கலாறு போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது. அதைப்போல வெள்ளிமலையில் படகு குழாமும், சிறுவர் பூங்காவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலைக்கு  கோடை மற்றும் விடுமுறை, பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் கார் போன்ற வாகனங்களில் சுற்றுலா செல்வது வழக்கம். தற்போது கல்வராயன்மலையில் நல்ல மழை பெய்ததன் மூலம் படகு துறையில் நல்ல நீர்பிடிப்பு உள்ளது. அதைப்போல நீர்வீழ்ச்சிகளிலும் நல்ல நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் நேற்று மொகரம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கடலூர், புதுவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், பஸ் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். அதைப்போல ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு துறைக்கு வந்து சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் படகு துறையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். படகு சவாரி செய்யும்போது ரம்யமான சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து சென்றனர். …

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்