மே 4-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மே 4-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மே 4, 5ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடலில் மே 4ம் தேதி முதல் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பிருப்பதால் மே 4ல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை:மத்தியப்பிரதேசம், அரியானா, கிழக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு உத்திரப்பிரதேசம், வட தெலுங்கானாவில் 3 நாளுக்கு வெப்ப அலை வீசும். மே 3,4ல் வட மாநிலங்களில் புழுதி புயல் வீசக்கூடும்:மே 2 முதல் 4ம் தேதி வரை பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் புழுதி புயல் வீச வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு:இன்றும், நாளையும் கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்