மே. வங்கத்தில் 9 பேர் பலியான விபத்து; பராமரிப்பு இல்லாமல் 18,000 கிமீ ஓடிய ரயில்: விசாரணையில் அதிர்ச்சி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் 9 பேரை பலி கொண்ட ரயில் விபத்தில், தடம்புரண்ட ரயில் இன்ஜின் வழக்கமான பராமரிப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் 18,000 கிமீ வரை ஓடிய அதிர்ச்சித் தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிகானிரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இயக்கப்படும் ‘பிகானிர் எக்ஸ்பிரஸ் ரயில்’, மேற்கு வங்க மாநிலம், டோஹோமொனி அருகே கடந்த மாதம் 13ம் தேதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பயணிகள் பலியாயினர். பலர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது ரயில் குறைந்த வேகத்திலேயே சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதன் முதற்கட்ட விசாரணயைில், விபத்துக்குள்ளான ரயில் இன்ஜின் 18,000 கிமீ வரை பராமரிப்பு, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல் இயக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக, ஒவ்வொரு 4,500 கிமீ பயணத்திற்குப் பிறகும் ரயில் இன்ஜினை பயண ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. இந்த பாதுகாப்பு விதிமுறை முறையாக பின்பற்றப்படவில்லை என விசாரணை அதிாரிகள் கூறி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி பயண ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இன்ஜின், விபத்துக்குள்ளாகும் வரை எந்த ஆய்வும் செய்யப்படாமல் 18,000 கிமீ வரை இயக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ரயில் இன்ஜின்கள் இயக்கப்படும் தகவல்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது….

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்