மே தின விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

 

கோவை, மே 3: மே தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி அறிவுறுத்தலின்படியும், தொழிலாளர் இணை ஆணையர் வி.லீலாவதி வழிகாட்டுதலின்படியும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் நேற்று முன்தினம் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 208 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டு இருந்தால், தொழிலாளர் நல அலுவலகத்தில் உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளனவா, தொழில் நிறுவனத்தில் அது வைக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர். திடீர் ஆய்வின்போது மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல், தொழிலாளர்கள் அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 78 உணவு நிறுவனங்கள உட்பட மொத்தம் 156 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை

குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள்