மேளதாளம் முழங்க பள்ளிக்கு குதிரையில் சென்ற மாணவர்கள்: ராஜபாளையத்தில் ஸ்வரஸ்யம்

ராஜபாளையம்:  ராஜபாளையத்தில் கொரோனா விடுமுறை முடிந்து நேற்று மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்ற நிலையில் குழந்தைகளை குதிரையில் மேளதாளங்களுடன் உற்சாகப்படுத்தி அனுப்பிய பெற்றோர்கள். கொரோனா பரவலால் ஓர் ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவல் குறைந்த நிலையில், மழலையர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில் ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த விஜேஷ், வெங்கடேஷ் ஆகியோர் தங்கள் குழந்தைகளை  நான்கு குதிரைகள் மற்றும் டிரம்ஸ், தப்பாட்டாம், மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதி வழியாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், `கொரோனா ஊரடங்கால்  குழந்தைகளின் கல்வி கடந்த சில வருடங்களாக துவக்கத்திலேயே பாதிக்கப்பட்டது. மேலும் மழலையர் பள்ளி திறக்கும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் பல பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இனியாஸ்ரீ, ஸ்ரீகார்த்திகா ஆகிய எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  குதிரையில் மேளதாளத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம்’ என்றனர். குழந்தைகள் பள்ளிக்கு  குதிரையில் சென்றதை மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்….

Related posts

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்