மேலூர் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் ஆய்வு

மேலூர், ஜூன் 29: மேலூர் நகராட்சியில் உள்ள கழிவு நீர் அகற்றும் வாகனங்களை, மண்டல இயக்குநர் உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் செயல்படும் கழிவு நீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சி மண்டல இயக்குநர் முஜிபூர் ரஹ்மான் உத்தரவுப்படி, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்படி, மேலூர் நகராட்சியில் ஒன்று, தனியார் வசம் உள்ள 3 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு பணிகளை மாற்று நகராட்சிகளை சேர்ந்த அதிகாரிகள் தான் நடத்த வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில், உசிலம்பட்டி நகராட்சி சுகாதார அதிகாரி சையது அபுதாஹிர், மண்டல இயக்குநர் அலுவலகத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் சிவரஞ்சனி ஆகியோர் வாகனங்களை சோதனை செய்தனர்.

வாகனங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா? அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், கமிஷனர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் சுப்பையா உடனிருந்தனர். நகராட்சியின் முறையான அனுமதியின்றி, கழிவு நீர் அகற்றும் வாகனங்களை தனியார் பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை