மேலப்பாளையத்தில் தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்

நெல்லை, நவ. 10: மேலப்பாளையத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மேலப்பாளையம் அப்துல்காதர் மகன் இம்ரான் நசீர். இவரது மனைவி முபினா பேகம் (22). இவர் கடந்த 6ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தோழி வீட்டிற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இம்ரான்நசீர் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், மாயமான முபினா பேகத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்