மேற்கூரை இல்லாததால் சின்னசேலம் சந்தையில் வியாபாரிகள் அவதி-அடர்ந்த செடி, கொடிகளுடன் காடாக மாறிய அவலம்

சின்னசேலம் :  சின்னசேலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வியாழக்கிழமை  அன்றும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில் சின்னசேலம்,  கள்ளக்குறிச்சி தலைவாசல் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில்  விளைவித்த காய்கறிகளை எடுத்து வந்து விற்று செல்கின்றனர். அதைப்போல  பொதுமக்களும் ஆடு, மாடுகளை விற்பது, வாங்கி செல்வது என வாடிக்கையாக நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட மக்கள்  வருகை தரும் பெரிய வாரசந்தை இதுவாகும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில்  சுமார் 30 லட்சத்திற்குமேல் ஆடு, மாடு விற்பனை நடைபெறுகிறது.

இந்த  வாரச்சந்தை வளாகம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. ஆனால்  இந்த சந்தை வளாகம் மழை காலத்தில் சேறும் சகதியுமாக காணப்படும்.  அதுமட்டுமில்லாமல் மேற்கூரையுடன் கூடிய கட்டிட வசதி இல்லாததால் மழையில்  நனைந்து கொண்டே விவசாயிகள் வியாபாரம் செய்ய வேண்டிய  நிலை உள்ளது. தற்போதுகூட  செடிகொடிகள் முளைத்து அடர்ந்த காடுபோல உள்ளது. ஆகையால்  சின்னசேலம் வாரச்சந்தை வளாகம் முழுவதும் சிமெண்ட் தளம் அமைப்பதுடன்,  வியாபாரிகள் நலன்கருதி மேற்கூரையுடன் கூடிய வளாக கட்டிடம் கட்டித்தர  வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
உழவர் சந்தை வளாகம் தேவைசின்னசேலம்  வாரசந்தை வளாகத்தில் பெரும்பாலான இடத்தை ஆடு, மாடு விற்பனையாளர்கள்  எடுத்துக்கொள்வதால் காய்கறி விற்பனைக்கு போதிய இடவசதி இல்லை. சின்னசேலம்  பகுதியில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இவர்கள்  தங்கள் நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல்  சந்தைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. ஆகையால் சின்னசேலம் பகுதியை சேர்ந்த  விவசாயிகள், பொதுமக்களின் நலன்கருதி இங்கு உழவர் சந்தை வளாகம் அமைக்க வேண்டும்  என்று எதிர்பார்க்கின்றனர்.

Related posts

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்