மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா, நடிகை அப்ரிதா வீடுகளில் மீண்டும் சோதனை: கட்டுக்கட்டாக மேலும் 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல்…!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக அந்த மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளரான நடிகை அப்ரிதா முகர்ஜி வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை இதுவரை 40 கோடி ரூபாய் பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்துள்ளன. கடந்த சனிக்கிழமை பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அப்ரிதா முகர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள இருவரின் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று மீண்டும் அப்ரிதா முகர்ஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மேலும் 20 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரது வீட்டிலிருந்து 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. முறைகேடுகான முக்கிய ஆதாரமாக இந்த செல்போன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் பல்கேரிய பகுதியில் உள்ள அப்ரிதா முகர்ஜியின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பெல்லிகுஞ்சுவில் உள்ள தொழிலதிபர் மனோஜின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.                   …

Related posts

நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை

மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்