மேற்கு வங்க அமைச்சர் ஜாகிர் உசேன் மீதான குண்டுவீச்சு திட்டமிட்ட சதிச் செயல்!: பாஜக-வை மறைமுகமாக சாடிய மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சதிச் செயலே காரணம் என அம்மாநில முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் உசேன். கொல்கத்தா செல்வதற்காக நேற்று இரவு 10 மணியளவில் முஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிம்திட்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவர் மீது மர்மநபர்கள் சிலர் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் உசேன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அமைச்சர் ஜாகிர் உசேன், சிகிச்சைக்காக ஐங்கிப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் உசேனின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதி செயலே காரணம் என  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய சதி அடங்கியுள்ளது. மேற்கு வங்கத் தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேனை வேறு கட்சியில் சேருமாறு அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இதன் உச்சகட்டமாக அவர் மீது திட்டமிட்டு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் ரயில்வே துறை மெத்தனமாக நடந்துள்ளது. அமைச்சர் உசேன் மீது தாக்குதல் நடத்துவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார். மேலும் அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட வழக்கை, மேற்கு வங்க அரசு சி.ஐ.டி-க்கு மாற்றியுள்ளது. இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் வழங்கப்படும் என தெரிவித்தார்….

Related posts

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்