மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் : மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை!!

கொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி 9.00 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் பாஜக 54 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி