மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.  கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதாவது, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சியில் கனமழை பெய்யக்கூடும். ஜூலை 28, 29ல் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்